
ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் 15 மாடல் இன்று (செப். 12) வெளியாகிறது. இந்தியா உள்பட சர்வதேச சந்தைகளில் இன்றுமுதலே ஐ-போன் 15 வகை மாடல்கள் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் இந்த ஐ-போன் 15 முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்படுவதால், 'மேட் இன் இந்தியா' என்று அச்சிடப்பட்டு வெளியாகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 15 சீரீஸில் ஐ-போன் 15, ஐ-போன் 15 ப்ரோ, ஐ-போன் 15 ப்ரோ மேக்ஸ், மற்றும் ஐ-போன் 15 பிளஸ் ஆகிய மாடல்கள் வெளியாகின்றன.
இதில் முக்கிய திருத்தமாக ஆப்பிள் நிறுவனங்களின் சார்ஜிங் போர்ட்டர்களுக்கு பதிலாக, டைப்-சி சார்ஜிங் போர்ட்டர் அம்சத்துடன் ஐ-போன் 15 வருகிறது.
ஐரோப்பிய நாடுகளில் அனைத்து மின்னணு சாதனங்களுக்கும் ஒரே மாதிரியான சார்ஜிங் அம்சத்தை பயன்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், ஆப்பிள் நிறுவனம் சார்ஜிங் போர்டரில் மாற்றங்களைச் செய்துள்ளது.
இந்தியாவில் ஐ-போன் 15 விலை குறைவா?
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதால் ஐ-போன் 15 விலை கணிசமாக குறைந்திருக்கும் என சமூக வலைதளங்களில் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை என்னவெனில், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதால், இறக்குமதி வரி மிச்சமாகிறது. ஷிப்பிங் சார்ஜ் எனப்படும் பொருளை பயனர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான தொகை குறையும். இதனால், அதிகம்பேர் விலை குறைவு எனக் கருதுகின்றனர்.
இந்தியாவில் ஐ-போன் 15 அடிப்படை அம்சங்கள் கொண்ட மாடல் விலை, ரூ. 1.2 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற ஐ-போன்களை விட விலை குறைவாக உள்ளதால், சாம்சங், ஒன் பிளஸ் நிறுவனங்களுக்குப் போட்டியாக ஐ-போன் 15 விற்பனை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...