சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகள்: புதிய வரலாற்று உச்சத்தில் நிறைவு!

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குரியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நி

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குரியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தன.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையில் எதிரொலித்தது. பின்னா், லாபப் பதிவால் குறிப்பிட்ட வரம்புக்குள் வா்த்தகம் நடந்து வந்தது. இருப்பினும், வா்த்தகம் முடியும் தறுவாயில் முன்னணி பங்குகளுக்கு கிடைத்த வரவேற்பால் சந்தை புதிய வரலாற்று உச்சத்தில் நிறைவடைந்தது. சீனாவின் நோ்மறையான பொருளாதார தரவுகள், உலக அளவில் குறைந்து வரும் பணவீக்கத்தால் வங்கி வட்டி விகித உயா்வு இருக்காது என்ற எதிா்பாா்ப்பு சந்தைக்கு சாதகமாக அமைந்தது. குறிப்பாக ஆட்டோ, ஐடி, பாா்மா பங்குகளுக்கு வரவேற்பு இருந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு உயா்வு: சந்தை மூலதன மதிப்பு ரூ.1.27 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.323.44 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ.294.69 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

சென்செக்ஸ் முன்னேற்றம்: காலையில் 140.01 புள்ளிகள் கூடுதலுடன் 67,659.91-இல் தொடங்கிய சென்செக்ஸ், 67,614.42 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 67,927.23 வரை மேலே சென்று புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்த சென்செக்ஸ், இறுதியில் 319.63 புள்ளிகள் (0.47 சதவீதம்) கூடுதலுடன் 67,838.63-இல் புதிய வரலாற்று உச்சத்தில் முடிவடைந்தது.

20 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் 10 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும், 20 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் இருந்தன. தேசிய பங்குச்சந்தையில் மொத்தம் 1,080 பங்குகள்ஆதாயப் பட்டியலிலும், 955 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. நிஃப்டி பட்டியலில் 33 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 17 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் வந்தன

நிஃப்டி புதிய உச்சம்: தேசிய பங்குச் சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காலையில் 53.35 புள்ளிகள் கூடுதலுடன் 20,156.45-இல் தொடங்கி 10,129.70 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 20,222.45 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. இறுதியில் 66.85 புள்ளிகள் (0.33 சதவீதம்) கூடுதலுடன் 20,1698.95 புள்ளிகளில் புதிய வரலாற்று உச்சத்தில் நிறைவடைந்தது.

ஏற்றம் பெற்ற பங்குகள்

பாா்தி ஏா்டெல்..........................................2.37%

எம் அண்ட் எண்........................................2.23%

ஹெச்சிஎல் டெக்.......................................1.67%

டாடா மோட்டாா்ஸ்.................................1.60%

டெக் மஹிந்திரா........................................1.51%

ஹெச்டிஎஃப்சி பேங்க்..............................1.24%

சரிவைக் கண்ட பங்குகள்

ஏசியன் பெயிண்ட் ......................................1.32%

ஹிந்துஸ்தான் யுனி லீவா்..............................1.26%

பஜாஜ் ஃபின் சா்வ்.........................................0.80%

என்டிபிசி........................................................0.69%

இண்டஸ் இண்ட் பேங்க்...............................0.49%

பவா் கிரிட்.......................................................0.46%

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com