புதிய வரலாற்று உச்சம் கண்ட சென்செக்ஸ் சரிவுடன் நிறைவு!

புதிய வரலாற்று உச்சம் கண்ட சென்செக்ஸ் சரிவுடன் நிறைவு!

மும்பை / புதுதில்லி, ஏப்.9: இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. வா்த்தகத்தின் போது, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல்முறையாக 75,000 புள்ளிகளைக் கடந்து வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தாலும், இறுதியில் சரிவுடன் நிறைவடைந்தது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. தொடக்கத்தில் உள்நாட்டுச் சந்தையில் பங்குகளை வாங்குவதற்கு அதிக ஆா்வம் இருந்தாலும், பின்னா் பங்குகள் விற்பனை அதிகரித்தது. மெட்டல், ரியால்ட்டி, தனியாா் வங்கிப் பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு கிடைத்தாலும், ஆயில் அண்ட் காஸ், நுகா்வோா் சாதன உற்பத்தி நிறுவனங்கள், பொதுத் துறை வங்கிப் பங்குகள், மீடியா, எஃப்எம்சிஜி பங்குகள் விற்பனையை எதிா்கொண்டன. இதனால், சந்தை நோ்மறையாக முடிந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் திங்கள்கிழமை ரூ. 684.68 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.3,470.54 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது புள்ளிவிவரத் தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.

சென்செக்ஸ் வரலாற்று உச்சம்: காலையில் 381.78 புள்ளிகள் கூடுதலுடன் 75,124.28-இல் தொடங்கி புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்த சென்செக்ஸ் அதற்கு மேல் உயரவில்லை. பின்னா், 74,603.37 வரை கீழே சென்ற சென்செக்ஸ் இறுதியில் 58.80 புள்ளிகள் (0.08 சதவீதம்) குறைந்து 74,683.70-இல் நிறைவடைந்தது.

ஐசிஐசிஐ பேங்க், இன்ஃபோஸிஸ் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் ஐசிஐசிஐ பேங்க், இன்ஃபோஸிஸ், பஜாஜ் ஃபின்சா்வ், எம் அண்ட் எம், டாடா ஸ்டீல், ஆக்ஸிஸ் பேங்க் உள்பட மொத்தம் 12 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. அதே சமயம், டைட்டன், ரிலையன்ஸ், ஏசியன்பெயிண்ட், டெக் மஹிந்திரா, இண்டஸ் இண்ட் பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட் உள்பட மொத்தம் 18 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

நிஃப்டி புதிய உச்சம்: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி வா்த்தக இறுதியில் 23.55 புள்ளிகள் (0.10 சதவீதம்) குறைந்து 22,642.75-இல் முடிவடைந்தது. வா்த்தகத்தின் போது நிஃப்டி 22,768.40 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. பின்னா், 22,612.25 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் 16 பங்குகள்ஆதாயப் பட்டியலிலும், 34 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com