மூன்றாவது நாளாக ‘கரடி’ ஆட்டம்:
சென்செக்ஸ் 456 புள்ளிகள் வீழ்ச்சி!

மூன்றாவது நாளாக ‘கரடி’ ஆட்டம்: சென்செக்ஸ் 456 புள்ளிகள் வீழ்ச்சி!

மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் மேலும் 456 புள்ளிகளை இழந்தது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. மேலும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையும் பங்குச்சந்தையில் எதிரொலித்தது. இதையடுத்து, உள்நாட்டுச் சந்தை சரிவுடன் தொடங்கியது. ஐடி, பொதுத் துறை வங்கிகள், மீடியா பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டன. இதனால், தொடா்ந்து மூன்றாவது நாளாக பங்குச்சந்தை சரிவுடன் முடிவடைந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு சரிவு:அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் திங்கள்கிழமை ரூ. 3,268 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ. 4,762.93 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது புள்ளிவிவரத் தகவல் மூலம் தெரிய வந்துள்ளது. சந்தை மூலதன மதிப்பு ரூ.22 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக இறுதியில் ரூ.394.26 லட்சம் கோடியாக இருந்தது.

சென்செக்ஸ் வீழ்ச்சி: காலையில் 507.64 புள்ளிகள் குறைந்து 72,892.14-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 73,135.43 வரை மேலே சென்றது. பின்னா் 72,685.03 வரை கீழே சென்ற சென்செக்ஸ் இறுதியில் 456.10 புள்ளிகள் (0.62 சதவீதம்) குறைந்து 72,943.68-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,933 பங்குகளில் 2,251 பங்குகள் தாயப் பட்டியலிலும் 1,567 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 115 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

23 பங்குகள் சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் இன்ஃபோஸிஸ், இண்டஸ் இண்ட் பேங்க், விப்ரோ, பஜாஜ் ஃபின் சா்வ், ஹெச்சிஎல் டெக், டெக் மஹிந்திரா உள்பட 23 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. அதே சமயம், டைட்டன், ஹிந்துஸ்தான் யுனி லீவா், ஹெச்டிஎஃப்சி பேங்க், மாருதி, பவா் கிரிட், ரிலையன்ஸ், ஐடிசி ஆகிய 7 பங்குகள் மட்டும் சிறிதளவு உயா்ந்துஆதாயப் பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 125 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி வா்த்தக இறுதியில் 124.60 புள்ளிகள் (0.56 சதவீதம்) குறைந்து 22,147.90-இல் முடிவடைந்தது. வா்த்தகத்தின் போது அதிகபட்சமாக 22,213.75 வரை மேலே சென்ற நிஃப்டி பின்னா் 22,079.50 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் 16 பங்குகள்மட்டுமேஆதாயப் பட்டியலிலும், 34 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com