கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

ஜியோ சினிமா: பிரிமீயம் சேவைக்கான கட்டணம் குறைப்பு
கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?
Published on
Updated on
1 min read

ஜியோ சினிமா செயலியின் பிரிமீயம் சேவைக்கான கட்டணத்தைக் குறைத்து அறிவித்துள்ளது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்.

மாதம் ஒன்றுக்கு ரூ.29 செலுத்தினால் ஜியோ சினிமாவில் உள்ள உள்ளடக்கத்தை விளம்பரங்களின்றி 4கே விடியோ தரத்தில் ஆன்லைனிலும் ஆப்லைனிலும் பயனர்கள் அணுகமுடியும்.

ரூ.29 மாதக் கட்டணத்தில் ஒரு நேரத்தில் ஒரு கருவியில் மட்டுமே செயலியின் உள்ளடக்கத்தை அணுகலாம். மற்றொரு திட்டமான பேமிலி பிரிமீயத்தில் மாதல் ரூ.89 செலுத்தினால் 4 கருவிகள் வரை பயனர்கள் ஒரே நேரத்தில் பார்க்கலாம் என ஜியோ தெரிவித்துல்ளது.

பல கோடி இந்தியர்கள் பார்க்கும் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் ஒளிபரப்புச் சேவை இலவசமாக தொடரும். இலவசமாக காணும்போது விளம்பரங்கள் உடன் பயனர்கள் பார்ப்பர்.

ஏன் இந்த விலைக் குறைப்பு?

தனது சந்தாதாரர்களை அதிகரிக்க ஜியோ விரும்புவதாகவும் ஓடிடி சேவை நிறுவனங்களில் முன்னணி இடத்தைப் பெறும் முயற்சி இது எனவும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

பீகாக், ஹெச்பிஓ, பாரமவுண்ட் மற்றும் வார்னர் ப்ரோஸ் உள்ளிட்ட ஹாலிவுட் ஒளிபரப்பு நிறுவனங்களின் முதன்மையான படங்கள்/ தொடர்கள் உரிமையை ஜியோ சினிமா கொண்டுள்ளது.

கேம் ஆப் த்ரோன்ஸ், சக்சஸன் ஆகியவை அவற்றில் அடக்கம். ஏராளமான குழந்தைகளுக்கான உள்ளடத்தையும் ஜியோ கொண்டுள்ளது.

ரிலையன்ஸ் உடன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி இணைப்பு நிறைவுற்றால் இந்த உள்ளடக்கத்தின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என தெரிகிறது.

ஜியோவின் போட்டி நிறுவனங்களான நெட்பிளிக்ஸ், அமேசான், டிஸ்னி ஆகியவை மாதத்திற்கு முறையே ரூ.299 முதல் ரூ.649 வரையிலான விலைகளில் சேவையை வழங்கிவரும் நிலையில் ஜியோவின் அந்த அதிரடி விலைக் குறைப்பு சந்தையில் முக்கியமான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com