
புது தில்லி, ஆக. 2: நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் இரும்புத் தாது உற்பத்தி 7.9 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
இது குறித்து சுரங்கத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பூா்வாங்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 7.9 கோடி டன் இரும்புத் தாது உற்பத்தி செய்யப்பட்டது.
முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 9.7 சதவீதம் அதிகம். அப்போது நாட்டின் இரும்புத் தாது உற்பத்தி 7.2 கோடி டன்னாக இருந்தது.
2023-24-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 11.4 கோடி டன்னாக இருந்த நாட்டின் சுண்ணாம்புக்கல் உற்பத்தி நடப்பு 2024-25-ஆம் நிதியாண்டின் அதே காலாண்டில் 1.8 சதவீதம் அதிகரித்து 11.6 டன்னாக உள்ளது.
மதிப்பீட்டுக் காலாண்டில் நாட்டின் மாங்கனீசு தாது உற்பத்தி 11 சதவீதம் அதிகரித்து 10 லட்சம் டன்னாக உள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் 9 லட்சம் டன்னாக இருந்தது.
இரும்பு அல்லாத உலோகத் துறையில், அலுமினியம் தாது உற்பத்தி கடந்த ஜூன் காலாண்டில் 1.2 சதவீதம் அதிகரித்துள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் 10.28 லட்சம் டன்னாக இருந்த அதன் உற்பத்தி, நடப்பு நிதியாண்டின் அதே காலகட்டத்தில் 10.43 லட்சம் டன்னாகப் பதிவாகியுள்ளது.
உலகளவில் இந்தியா இரண்டாவது பெரிய அலுமினிய உற்பத்தி நாடாகத் திகழ்கிறது. சுண்ணாம்பு உற்பத்தியில் மூன்றாவது இடத்தையும் இரும்புத் தாது உற்பத்தியில் நான்காவது இடத்தையும் இந்தியா வகிக்கிறது.
நடப்பு நிதியாண்டில் இரும்புத் தாது மற்றும் சுண்ணாம்புக்கல் உற்பத்தியில் ஏற்பட்டு வரும் தொடா் வளா்ச்சி காரணமாக, உள்கட்டமைப்பு, கட்டுமானம், வாகனம், இயந்திரங்கள் போன்ற சாா்புத் துறைகளும் வலுவான வளா்ச்சியை எதிா்நோக்கியுள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.