டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சற்று உயர்வு!

நேற்று 37 காசுகள் சரிந்த நிலையில், இன்று 16 காசுகள் உயர்ந்துள்ளது.
ரூபாய் மதிப்பு 16 காசுகள் உயர்வு
ரூபாய் மதிப்பு 16 காசுகள் உயர்வுபிடிஐ
Published on
Updated on
2 min read

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று (ஆக. 6) சற்று உயர்ந்தது.

நேற்று 37 காசுகள் சரிந்த நிலையில், இன்று 16 காசுகள் உயர்ந்துள்ளது.

உலகளாவிய சந்தைகளில் நிலவும் மந்த நிலையால் இந்திய ரூபாய் மதிப்பு நேற்று கடுமையாக சரிந்தது. நேற்றைய வணிக நேர முடிவில் 37 காசுகள் சரிந்து 84.09 ரூபாயாக இருந்தது.

இதனிடையே இன்றைய வணிக நேரத் தொடக்கத்தில் எந்தவித மாற்றமுமின்றி இருந்த ரூபாய் மதிப்பு, 16 காசுகள் உயர்ந்து 83.93 ரூபாயாக இன்று மாலை நிறைவு பெற்றது.

இதன்மூலம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று சற்று உயர்ந்துள்ளது.

ரூபாய் மதிப்பு 16 காசுகள் உயர்வு
ரூபாய் மதிப்பு 16 காசுகள் உயர்வுபிடிஐ

இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று மிகப்பெரிய சரிவை அடைந்ததற்கு, மத்திய அரசுன் தவறான நிதி மேலாண்மை மற்றும் நிர்வாகத் திறனே காரணம் என காங்கிரஸ் கட்சி இன்று குற்றம் சாட்டியது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கீழ், கடந்த 10 ஆண்டுகளாக இந்திய ரூபாயின் மதிப்பு 30% வரை சரிந்துள்ளதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா விமர்சித்தார்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையின் முதலீடுகளை திரும்பப் பெற்றதே ரூபாய் மதிப்பு சரியக் காரணம் எனவும் குற்றம் சாட்டினார்.

வணிகத்தின் முதல் நாளான நேற்று சென்செக்ஸ் 3% வரை சரிவை சந்தித்தது. இதனால் ரூ.17 லட்சம் கோடி வரை முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவின் வேலையின்மை விகிதம் அதிகரித்ததால், பொருளாதார மந்தநிலை ஏற்படும் என வணிக நிபுணர்கள் கணித்துள்ளனர். அமெரிக்காவில் வேலையின்மை விகிதம் கடந்த மாதத்தை விட அதிகரித்துள்ளதால், முதலீட்டாளர்களிடையே அச்சம் நிலவுகிறது. இதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டது. இது 2வது நாளாக இன்றும் தொடர்ந்தது.

இந்தியா மட்டுமின்றி கொரியா, ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா நாடுகளின் பங்குச்சந்தை வணிகமும் சரிவை சந்தித்தது.

இன்றைய பங்குச்சந்தை நிலவரம்

வாரத்தின் இரண்டாவது வணிக நாளான இன்று (ஆக. 6) பங்குச்சந்தை சரிவுடன் முடிந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 166.33 புள்ளிகள் சரிந்து 78,593.07 புள்ளிகளாக வணிகம் நிலைப்பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.21% சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 63.05 புள்ளிகள் வரை சரிந்து 23,992.55 புள்ளிகளுடன் வணிகம் நிறைவு பெற்றது. இது 0.26% சரிவாகும்.

நேற்றைய பங்குச்சந்தை வணிகத்தில் 3% வரை இருந்த சரிவுடன் ஒப்பிடுகையில், இது மிகவும் மோசமில்லை என்றாலும், சென்செக்ஸ் பட்டியலில் 18 நிறுவனத்தின் பம்ங்குகள் சரிவுடனே இருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com