பிஎன்பி காலாண்டு லாபம் புதிய உச்சம்
அரசுக்குச் சொந்தமான பஞ்சாப் நேஷனல் வங்கியின் (பிஎன்பி) நிகர லாபம் கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.3,252 கோடியாக உள்ளது. இது வங்கியின் அதிகபட்ச காலாண்டு நிகர லாபமாகும். முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் வங்கி ரூ.1,255 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.
மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.28,579 கோடியிலிருந்து ரூ.32,166 கோடியாக உயா்ந்துள்ளது.
2023 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.9,504 கோடியாக இருந்த வங்கியின் நிகர வட்டி வருவாய் நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் 10.23 சதவிகிதம் அதிகரித்து ரூ.10,476 கோடியாக உள்ளது.
2023 ஜூன் இறுதியில் 7.73 சதவீதமாக இருந்த மொத்த வாராக் கடனும் 1.98 சதவீதமாக இருந்த நிகர வாராக் கடனும் 2024 ஜூன் மாத இறுதியில் முறையே 4.98 சதவீதமாகவும் 0.60 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.