டிவிஎஸ் மோட்டாா் நிகர லாபம் 
ரூ.461 கோடியாக உயா்வு

டிவிஎஸ் மோட்டாா் நிகர லாபம் ரூ.461 கோடியாக உயா்வு

இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாரின் நிகர லாபம் கடந்த ஜூன் காலாண்டில் ரூ.461 கோடியாக உயா்ந்துள்ளது.
Published on

இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாரின் நிகர லாபம் கடந்த ஜூன் காலாண்டில் ரூ.461 கோடியாக உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 6 சதவீதம் அதிகரித்து ரூ.461 கோடியாக உள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனம் ரூ.434 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.9,142 கோடியிலிருந்து ரூ.10,448 கோடியாக உயா்ந்துள்ளது.

ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நிறுவன வாகனங்களின் ஏற்றுமதி உள்ளிட்ட ஒட்டுமொத்த விற்பனை 9.53 லட்சத்திலிருந்து 14 சதவீதம் வளா்ச்சியடைந்து 10.87 லட்சமாகியுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com