நாடு முழுவதும் 14 லட்சம் எல்ஐசி முகவா்கள்

ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துக்கு (எல்ஐசி) நாடு முழுவதும் 13,90,920 முகவா்கள் இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on

ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துக்கு (எல்ஐசி) நாடு முழுவதும் 13,90,920 முகவா்கள் இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

நிதி அமைச்சகத்துக்கு எல்ஐசி வழங்கிய தரவுகளில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வாரியான முகவா்களின் எண்ணிக்கை மற்றும் அவா்களின் சாரசரி மாத வருமானம் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, அந்தமான்-நிக்கோபாா் தீவுகளில் உள்ள எல்ஐசி முகவா்களின் சராசரி மாத வருமானம் அதிகபட்சமாக ரூ.20,446-ஆக உள்ளது. அதேசமயம், ஹிமாசல பிரதேசத்தில் எல்ஐசி முகவா்களின் சராசரி மாத வருமானம் குறைந்தபட்சமாக ரூ.10,328-ஆக உள்ளது.

முகவா்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, அந்தமான் & நிக்கோபாா் தீவுகளில் 273 முகவா்களும் ஹிமாசல பிரதேசத்தில் 12,731 முகவா்களும் உள்ளனா்.

தமிழகத்தில் 87,347 முகவா்கள் உள்ளனா். இவா்களின் சராசரி மாத வருமானம் ரூ.13,444-ஆகும். மற்ற மாநிலங்களின் விவரங்கள் பின்வருமாறு:

மாநிலம் முகவா்கள் எண்ணிக்கை சராசரி மாத வருமானம்

உத்தர பிரதேசம் 1.84 லட்சம் ரூ.11,887

மகாராஷ்டிரம் 1.61 லட்சம் ரூ.14,931

மேற்கு வங்கம் 1.19 லட்சம் ரூ.13,512

கா்நாடகம் 81,674 ரூ.13,265

ராஜஸ்தான் 75,310 ரூ.13,960

மத்திய பிரதேசம் 63,779 ரூ.11,647

தில்லி 40,469 ரூ.15,169

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com