புதுதில்லி: கேர் ரேட்டிங்ஸ் நிறுவனமானது, கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சிஸ் விதிகளை மீறியதாகக் கூறப்படும் வழக்கில் ரூ.13.05 லட்சம் செலுத்தி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபியிடம் வழக்கை முடித்துகொண்டது.
உண்மையை ஒப்புக்கொள்ளவோ அல்லது மறுக்க செய்யாமல், நிறுவனத்துக்கு எதிராக தொடங்கப்பட்ட நடவடிக்கைகளை தீர்க்க கேர் ரேட்டிங்ஸ் செபியிடம் புதிய மனுவை தாக்கல் செய்ததையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
செட்டில்மென்ட் விதிமுறைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டதையடுத்து, தொகை பெறப்பட்டது என்று தெரிவித்த செபி, கேர் ரேட்டிங்ஸ் நிறுவனத்திற்கு எதிராக தொடங்கப்பட்ட நடவடிக்கைகள் முடித்து வைக்கப்பட்டது என்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.