பங்குச்சந்தையில் காளை ஆதிக்கம்: சென்செக்ஸ் 612 புள்ளிகள் உயர்வு

இந்த வாரத்தின் முதல் வர்த்தக வர்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தையில் "காளை'யின் எழுச்சி காணப்பட்டது.
காளை ஆதிக்கம்
காளை ஆதிக்கம்
Published on
Updated on
1 min read

மும்பை / புது தில்லி: இந்த வாரத்தின் முதல் வர்த்தக வர்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தையில் "காளை'யின் எழுச்சி காணப்பட்டது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 612 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இருப்பினும், அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வரும் காலங்களில் வங்கி வட்டி விகிதத்தை குறைத்து அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக உள்நாட்டுச் சந்தையில் காளையின் எழுச்சி இருந்தது. இருப்பினும், பிற்பகலில் வர்த்தகம் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் இருந்து வந்தது. தனியார் வங்கிகள், ஐடி, ஆட்டோ, ரியால்ட்டி, மெட்டல், ஆயில் அண்ட் காஸ், மின்சாதன உற்பத்தி நிறுவன பங்குகளுக்கு ஆதரவு இருந்தது. அதே சமயம், பொதுத்துறை வங்கிப் பங்குகள், மீடியா பங்குகள் விற்பனையை எதிர்கொண்டன என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: சந்தை மூலதன மதிப்பு ரூ.2.33 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.462.30 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ.1,944.48 கோடிக்கும் உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.2,896.02 கோடிக்கும் பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் எழுச்சி: சென்செக்ஸ் காலையில் 302.05 புள்ளிகள் கூடுதலுடன் 81,388.26}இல் தொடங்கி 81,278.44 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 81,824.27 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 611.90 புள்ளிகள் (0.75 சதவீதம்) கூடுதலுடன் 81,698.11}இல் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வர்த்தகமான 4,197 பங்குகளில் 2,191 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 1,857 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 149 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

22 பங்குகள் விலை உயர்வு: சென்செக்ஸ் பட்டியலில் ஹெச்சிஎல் டெக், என்டிபிசி, பஜாஜ் ஃபின்சர்வ், டெக் மஹிந்திரா, ஜேஎஸ்எஸ்டபிள்யு ஸ்டீல், டைட்டன் உள்பட 22 பங்குகள் விலையுயர்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், அதானி போர்ட்ஸ், மாருதி, நெஸ்லே, கோட்டக் வங்கி, சன்ஃபார்மா, ஹிந்துஸ்தான் யுனிலீவர் உள்பட 8 பங்குகள் மட்டுமே விலை குறைந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி புள்ளிகள் உயர்வு

தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 24,906.10}இல் தொடங்கி 24,823.70 வரை கீழே சென்றது. பின்னர் அதிகபட்சமாக 25,043.80 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 187.45 புள்ளிகள் (0.76 சதவீதம்) உயர்ந்து 25,010.60}இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 33 பங்குகள் விலை உயர்ந்த பட்டியலிலும், 17 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com