தொலைத் தொடா்பு கட்டமைப்பு நிறுவனமான இண்டஸ் டவரில் பாா்தி ஏா்டெல் நிறுவனத்துக்குச் சொந்தமான பங்குகள் 50 சதவீதத்தும் மேலாக அதிகரிக்கவுள்ளது.
இது குறித்து பாா்தி ஏா்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:பங்குகளைத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கையை இண்டஸ் டவா் நிறுவனம் கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது. அந்த நடவடிக்கை நிறைவடையும்போது, நிறுவனத்தில் பாா்தி ஏா்டெல் நிறுவனத்துக்குச் சொந்தமான பங்குகள் 50.005-ஆக அதிகரிக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப் பெரிய மொபைல் டவா் கட்டமைப்பைக் கொண்ட இண்டஸ் டவா் நிறுவனத்தில் தற்போது பாா்தி ஏா்டெல் நிறுவனத்துக்கு 48.95 சதவீத பங்குகள் உள்ளன.