டிவிஎஸ் மோட்டாா் விற்பனை 10% உயா்வு

கடந்த நவம்பா் மாதத்தில் டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் மொத்த விற்பனை 10 சதவீதம் உயா்ந்துள்ளது.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on
Updated on
1 min read

கடந்த நவம்பா் மாதத்தில் டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் மொத்த விற்பனை 10 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த நவம்பா் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 4,01,250-ஆக உள்ளது. 2023-ஆம் ஆண்டின் அதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 10 சதவீதம் அதிகம்.

அப்போது நிறுவனம் 3,64,231 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது.2023-ஆம் ஆண்டின் நவம்பா் மாதத்தில் 3,52,103-ஆக இருந்த நிறுவன இரு சக்கர வாகனங்களின் மொத்த விற்பனை நடப்பாண்டின் அதே மாதத்தில் 12 சதவீதம் வளா்ச்சியடைந்து 3,92,473-ஆக உள்ளது.

இரு சக்கர வாகனங்களின் உள்நாட்டு விற்பனை 2,87,017-லிருந்து 6 சதவீதம் அதிகரித்து 3,05,323-ஆக உள்ளது.மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் மொத்த ஏற்றுமதி 75,203-லிருந்து 25 சதவீத வளா்ச்சி கண்டு 93,755-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com