
மும்பை: உள்நாட்டு விமான நிறுவனமான இண்டிகோ ஜனவரி 10 முதல் புதுதில்லி - பெங்களூரு வழித்தடத்தில் வாடிக்கையாளர்களுக்கு வணிக வகுப்பு சேவையைத் தொடங்குவதாக நேற்று (திங்கள்கிழமை) தெரிவித்தது.
இண்டிகோ ஸ்ட்ரெச் என்று பெயரிடப்பட்ட குருகிராமை தளமாகக் கொண்ட விமான நிறுவனம், கடந்த மாதம் தில்லி - மும்பை வழித்தடத்தில் தனது சேவையைத் தொடங்கியது.
தில்லி - பெங்களூரு இடையே தினசரி 15 விமானங்களுடன் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் வணிக வகுப்பு இருக்கைகளுடன் தனது சேவையைத் தொடங்கும் என்று தெரிவித்த வேளையில், 2025 ஜனவரி தொடக்கத்தில் புதுதில்லி - மும்பை இடையே தினசரி 20 விமானங்களை இயக்கும் என்றது இண்டிகோ.
இதையும் படிக்க: ஏற்றத்திற்கு பிறகு, மீண்டும் சரிந்த சென்செக்ஸ், நிஃப்டி!
வணிக வகுப்பு இருக்கைகளுடன் 12 வழித்தடங்களில் சேவையை வழங்குவதற்கான எங்கள் அறிவிப்பிற்கு இணங்க, புதுதில்லி - பெங்களூருவை எங்கள் இரண்டாவது பாதையாக இணைத்துள்ளோம்.
வெகு விரைவில் புதுதில்லி - சென்னை இடையேயான சேவையை அறிவிப்போம் என்றார் இண்டிகோவின் தலைமை நிர்வாக அதிகாரியான பீட்டர் எல்பர்ஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.