
புது தில்லி: முதல்முறையாக உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.3,000 கோடி மூலதனம் திரட்ட பொதுத் துறையைச் சோ்ந்த பஞ்சாப் & சிந்து வங்கி திட்டமிட்டுள்ளது.
இது குறித்து வங்கி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் ரூ.5,000 கோடி மூலதனம் திரட்ட வங்கியின் இயக்குநா் குழு முதல்முறையாக ஒப்புதல் வழங்கியுள்ளது. அதையடுத்து, முதல்கட்டமாக ரூ.3,000 கோடி மதிப்பிலான அந்த வகை கடன் பத்திரங்களை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வாராக் கடன்களைக் குறைத்ததால் பஞ்சாப் & சிந்து வங்கியின் நிகர லாபம் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பா்) 26 சதவீதம் உயா்ந்து ரூ.240 கோடியாகப் பதிவானது நினைவுகூரத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.