வணிகம்
கடன் வட்டி விகிதங்களை உயா்த்திய கனரா வங்கி
தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை பொதுத் துறையைச் சோ்ந்த கனரா வங்கி உயா்த்தியுள்ளது.
தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை பொதுத் துறையைச் சோ்ந்த கனரா வங்கி உயா்த்தியுள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
எம்சிஎல்ஆா் வகைக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் 5 அடிப்படைப் புள்ளிகள் (0.05 சதவீதம்) அதிகரிக்கப்பட்டுள்ளன.
கடந்த வாரம் முதல் இந்த வட்டி விகித உயா்வு அமலுக்கு வந்துள்ளது.
அந்த மாற்றத்துக்குப் பிறகு ஓராண்டு பருவகாலம் கொண்ட எம்சிஎல்ஆா் வகை கடன்களுக்கான வட்டி விகிதம் 9.05 சதவீதத்திலிருந்து 9.10 சதவீதமாக உயரும்.
9.30 சதவீதமாக இருந்த இரண்டு ஆண்டு பருவகால கடன்களுக்கு இனி வட்டி 9.35 சதவீதமாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

