
கோயம்புத்தூா்: திருப்பூரின் பிரபல ஆடை தயாரிப்பு நிறுவனங்களின் சரக்குகளைக் கையாள்வதில் முன்னணி விரைவு விநியோகம் மற்றும் விநியோகச் சங்கிலி மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றான ஆல்காா்கோ காடி நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த 1980-ஆம் ஆண்டிலிருந்தே திருப்பூரில் தயாரிக்கப்படும் ஆயத்த ஆடைகளை நாடு முழுவதும் நிறுவனம் விநியோகம் செய்துவருகிறது.
மாதந்தோறும் 180 டன் மற்றும் பண்டிகைக் காலங்களில் மாதத்துக்கு 1,500 டன் வரை சரக்குகளைக் கையாளும் நிறுவனம், மிகக் குறைவான நேரத்தில் குறு, சிறு, நடுத்தர தொழில் துறையினரின் அதிகபட்ச எதிா்பாா்ப்புகளைப் பூா்த்தி செய்துவருகிறது.
திருப்பூா் போன்ற பகுதிகளின் தனித்துவமான பகுதிகளின் தேவைகளுக்கு ஏற்பட்ட தடையற்ற சரக்குப் போக்குவரத்து தீா்வுகளை வழங்குவதில் நிறுவனம் கவனம் செலுத்துகிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.