
ஹைதராபாத்: இதுவரை இல்லாத அளவில், தெலங்கானாவில் கடந்த 43 நாள்களில் 4,251 மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
போக்குவரத்து துறை அதிகாரிகளின் தகவலின் அடிப்படையில், மாநில அரசு, 'தெலங்கானா மின்சார வாகனம் மற்றும் ஆற்றல் சேமிப்புக் கொள்கை 2020-2030' ஐ அறிமுகப்படுத்திய பிறகு, மாநிலத்தில் மின்சார வாகனங்களின் பதிவு படிப்படியாக உயர்ந்துள்ளது.
மின்சார வாகன உரிமையாளர்களுக்கு குறிப்பிடத்தக்க நன்மைகள் இதில் அடங்கியுள்ள நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு டிசம்பர் 31, 2026 தேதி வரை சாலை வரி மற்றும் மின்சார வாகனங்களுக்கான பதிவுக் கட்டணத்திலிருந்து 100 சதவிகிதம் விலக்கு அளிக்கப்படுகிறது.
போக்குவரத்து துறையிடம் உள்ள தரவுகளின் அடிப்படையில், இந்த ஆண்டு, மாநிலத்தில் 78,862 புதிய மின்சார வாகனங்கள் பதிவாகி உள்ளது. இது முந்தைய ஆண்டு 52,134 ஆக இருந்தது. அதே வேளையில், இந்த ஆண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆட்டோக்களுடன் அனைத்து வகையான மின்சார வாகனங்களின் பதிவும் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: 2025ல் தங்கத்தின் விலை ரூ.90,000 எட்டக்கூடும் என கணிப்பு!
கடந்த ஒரு மாதத்தில் 3,704 இருசக்கர வாகனங்களும், 138 மூன்று சக்கர வாகனங்களும் பதிவான நிலையில், முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் முறையே 1,800 மற்றும் 30 ஆக இருந்தது.
கடந்த ஜூலை மாதம் மாநில அரசு அனைத்து சலுகைகளையும் திரும்பப் பெற்ற பிறகு, மாநிலத்தில் மின்சார வாகனங்களின் விற்பனை கடுமையாக வீழ்ச்சியடைந்த நிலையில், கடந்த ஒரு மாதத்தில் இது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
கடந்த மாதத்தில் 1,008 மின்சார கார்கள் பதிவான நிலையில், இது முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் சுமார் 345 வாகனங்கள் பதிவானது.
தற்போது, தெலங்கானாவில் 1.3 லட்சம் இரு சக்கர வாகனங்கள் மற்றும் 12,765 கார்கள் உள்பட 1.7 லட்சம் மின்சார வாகனங்கள் உள்ளன. இதே நிலை தொடர்ந்தால், நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் 60,000 புதிய மின்சார வாகனங்கள் இணையும் என்ற நிலையில், இது போக்குவரத்து நேரிசலை ஏற்படுத்தக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சாலை வரி மற்றும் மின்சார வாகனங்களுக்கான பதிவிலிருந்து விலக்கு அளிக்கும் தெலங்கானா அரசின் முடிவு சரியான திசையில் உள்ளதாகவும், இது மின்சார வாகனங்களின் விற்பனையை மேலும் அதிகரிக்க உதவும் என்றும் டீலர்களும் தற்போது உணர்ந்துள்ளனர்.
இதையும் படிக்க: தள்ளாடும் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 109 புள்ளிகள் சரிவுடன் முடிவு!
இருப்பினும், மாநிலத்தில் போதுமான எண்ணிக்கையிலான சார்ஜிங் நிலையங்கள் இல்லாதது, மின்சார வாகன பயனர்களுக்கு இது சிக்கல்களை ஏற்படுத்தும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது, மாநிலத்தில் சுமார் 700 மின்சார சார்ஜிங் நிலையங்கள் உள்ள நிலையில், இதன் தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை.
மின்சார வாகனங்களை வாங்குபவர்களை ஊக்குவிப்பதற்காவும், அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்காவும் ஹைதராபாத் முழுவதும், குறிப்பாக ஓஆர்ஆர் மற்றும் நெடுஞ்சாலைகளில் கூடுதல் சார்ஜிங் நிலையங்களை நிறுவ வேண்டிய அவசியம் உள்ளது என்று டீலர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.