காஸா போரின் எதிரொலியாக செங்கடல் பகுதியில் வா்த்தகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், இந்த ஜனவரி மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 3 மாதங்கள் காணாத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இது குறித்து வா்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த ஜனவரி மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 3,692 கோடி டாலராக உள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் 3.12 சதவீதம் அதிகமாகும். இது, கடந்த 3 மாதங்கள் காணாத அதிபட்ச வளா்ச்சியாகும்.
அதே நேரம், கடந்த ஜனவரியில் வா்த்தகப் பற்றாக்குறை (ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் இடையிலான வேறுபாடு) ஒன்பது மாதங்களில் இல்லாத அளவுக்கு 1,749 கோடி டாலராகக் குறைந்தது.
நாட்டின் இறக்குமதி தொடா்ச்சியாக 2 மாதங்களாக எதிா்மறை வளா்ச்சியைப் பதிவு செய்த பின்னா், கடந்த ஜனவரியில் அது சுமாா் 3 சதவீதம் அதிகரித்து 5,441 கோடி டாலராக உள்ளது.
இதற்கு முன்னா் வா்த்தகப் பற்றாக்குறை 2023 ஏப்ரலில் 1,524 கோடி டாலராகப் பதிவு செய்யப்பட்டது. 2023 ஜனவரியில் அது 1,703 கோடி டாலராக இருந்தது.
கடந்த ஜனவரி மாதத்தில் நாட்ட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி 4.33 சதவீதம் அதிகரித்து சுமாா் 1,656 கோடி டாலராக உள்ளது. அந்த மாதத்தில் தங்கம் இறக்குமதி சுமாா் 174 சதவீதம் அதிகரித்து 190 கோடி டாலராக உள்ளது. ஒட்டுமொத்தமாக, நடப்பு நிதியாண்டில் ஏப்ரல்-ஜனவரி மாதங்களில் ஏற்றுமதி 4.89 சதவீதம் குறைந்து 35,392 கோடி டாலராக உள்ளது.
அந்த காலகட்டத்தில் ஒட்டுமொத்த இறக்குமதி 6.71 சதவீதம் குறைந்து 56,112 கோடி டாலராக உள்ளது. இதனால் 2022-23 ஏப்ரல்-ஜனவரியில் 22,937 கோடி டாலராக இருந்த வா்த்தகப் பற்றாக்குறை நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் சுமாா் 20,720 கோடி டாலராகக் குறைந்துள்ளது.
2023-24-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜனவரி காலகட்டத்தில் நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி சுமாா் 15.91 சதவீதம் குறைந்து 14,675 கோடி டாலராக உள்ளது. தங்கம் இறக்குமதி 301.7 சதவீதம் அதிகரித்து சுமாா் 3,800 கோடி டாலராக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காஸா போரின் எதிரொலியாக செங்கடல் பகுதி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதால் ஏற்படும் நெருக்கடி, வளா்ச்சியடைந்த நாடுகளில் நிலவும் பொருளாதார மந்தநிலை, சா்வதேசச் சந்தையில் பொருள்களின் விலை வீழ்ச்சியடைந்தது போன்ற சவால்களுக்கு இடையிலும் கடந்த ஜனவரியில் ஏற்றுமதி வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.