வைப்பு நிதி வளா்ச்சியில் மகாராஷ்டிர வங்கி முதலிடம்

வைப்பு நிதி வளா்ச்சியில் மகாராஷ்டிர வங்கி முதலிடம்

Published on

புது தில்லி, பிப். 17: கடந்த டிசம்பா் காலாண்டில் நாட்டின் பொதுத் துறை வங்கிகளிடையே வைப்பு நிதி ளோ்ச்சியில் மகாராஷ்டிர வங்கி (பிஓஎம்) முதலிடம் பெற்றுள்ளது.

இது குறித்து வங்கிகள் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த 2023 அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் பொதுத் துறை வங்கிகளின் வைப்பு நிதி சேகரிப்பில் புணேவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மகாராஷ்டிர வங்கி முதலிடத்தில் உள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டிலும் (2023 ஏப்ரல்-ஜூன்), 2-ஆவது காலாண்டிலும் (2023 ஜூலை-செப்டம்பா்) காலாண்டிலும் கூட இந்த வங்கிதான் கடன் விநியோகம் மற்றும் வைப்பு நிதி சேகரிப்பில் முதலிடம் பிடித்தது.

டிசம்பா் காலாண்டில் மகாராஷ்டிர வங்கியின் வைப்பு நிதி சேகரிப்பு 17.89 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது. இது, 12 பொதுத் துறை வங்கிகளிடையே அந்தக் காலாண்டில் அதிகபட்ச வளா்ச்சியாகும்.

அதற்கு அடுத்தபடியாக பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) வைப்பு நிதி சேகரிப்பு 12.84 சதவீதம் அதிகரித்துள்ளது. இருந்தாலும், நாட்டின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ-யின் வைப்பு நிதி சேகரிப்பு மகாராஷ்டிர வங்கியைப் போல் 18.5 சதவீதம் அதிகமாகும்.

வைப்பு நிதி சேகரிப்பில் 9.53 சதவீத வளா்ச்சியைப் பெற்று சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

X
Dinamani
www.dinamani.com