மூழ்கும் கப்பலில் ரிலையன்ஸ் முதலீடு செய்கிறதா? : டிஸ்னி இணைப்பு குறித்த அலசல்

ரிலையன்ஸ்-டிஸ்னி இணைப்பு: புதிய சந்தை வளர்ச்சியில் நல்ல முன்னேற்றமா?
மூழ்கும் கப்பலில் ரிலையன்ஸ் முதலீடு செய்கிறதா? : டிஸ்னி இணைப்பு குறித்த அலசல்

சமீப காலமாக பேசப்பட்டு வந்த ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி இணைப்பு தற்போது அதிகாரபூர்வாகியுள்ளது. தொலைக்காட்சி மற்றும் இணைய ஒளிபரப்பு சேவைகள் வழங்கி வரும் இருபெரும் நிறுவனங்களின் இணைப்பு இந்திய செய்தி மற்றும் பொழுதுபோக்கு சந்தையில் முக்கியமனதாகக் கருதப்படுகிறது.

இந்திய மதிப்பில் 70 ஆயிரம் கோடி சந்தை மதிப்பு கொண்ட புதிய ஒளிபரப்பு சேவை நிறுவனமாக கூட்டு நிறுவனம் உருவாகும்.

100-க்கும் அதிகமான தொலைக்காட்சி சேனல்கள், இரண்டு மிகப்பெரிய இணைய ஒளிப்பரப்பு சேவைகள் (டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ சினிமா) ஒன்றிணையவுள்ளன.

இது ரிலையன்ஸுக்கு லாபம் தரும் இணைப்பு தானா?

இந்த கேள்வி எழுவதற்கு காரணம் சமீபத்திய ஆண்டுகளில் டிஸ்னியின் வருவாய் இழப்புதான்.

1993-ல் இந்தியாவுக்குள் வந்த டிஸ்னி கடந்த ஆண்டு சரிவைச் சந்தித்தது. 2023 முதல் 2027 வரை ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஒளிப்பரப்பு உரிமத்தைப் பெற தவறியது. மேலும், 1.15 கோடி பயனர்களை டிஸ்னி இழந்தது.

ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னியின் சேனல்கள்
ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னியின் சேனல்கள்dotcom

எந்தளவுக்கு என்றால் வார்னர் ப்ரோஸ் டிஸ்கவரி நிறுவனம் தனது வலைத்தொடர்களான ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ மற்றும் ‘சக்சஸன்’ ஆகியவற்றை ஜியோ சினிமாவுக்கு கொடுத்தது.

கூட்டு நிறுவனம்:

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் வால்ட் டிஸ்னி இடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில் வியாகாம்18 சேனல்கள் மற்றும் டிஸ்னி இணைகிறது.

புதிய கூட்டு நிறுவனத்தில் ரிலையன்ஸ் 16.3 சதவிகித பங்குகளையும் வியாகாம் 46.8 சதவிகிதம் பங்குகளையும் டிஸ்னி 36.8 சதவிகித பங்குகளையும் வகிக்கவுள்ளன.

புதிய நிறுவனத்துக்கு முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா அம்பானி தலைவராக செயல்படவுள்ளார். டிஸ்னி இந்தியாவின் தலைவர் உதய் சங்கர், உதவி தலைவராகவும் ஆலோசகராகவும் செயல்படுவார்.

கலர், ஸ்டார்பிளஸ், ஸ்டார்கோல்ட், ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்போர்ட்ஸ்18 என கூட்டு நிறுவனத்தின் சேனல்கள் இந்தியாவின் முன்னணி மீடியா நிறுவனமாக அமையும் என ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

ரிலையன்ஸ்
ரிலையன்ஸ்dotcom

75 கோடி பார்வையாளர்கள் இந்தியா முழுவதும் கூட்டு நிறுவனத்தின் சேனல்களுக்கு உள்ளதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது.

மேலு, உலகளாவிய டிஸ்னி படங்கள் மற்றும் தயாரிப்பின் தனித்துவ இந்திய ஒளிப்பரப்பு உரிமையை கூட்டு நிறுவனம் பெறும். 30 ஆயிரத்துக்கு அதிகமான டிஸ்னியின் படங்கள்/தொடர்களை இந்த கூட்டு நிறுவனம் கையாளவுள்ளது.

இந்தாண்டு முடிவு அல்லது 2025 இறுதிக்குள் இணைப்பு முழுமையடையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

2 லட்சம் மணிநேரங்களுக்கும் அதிகமான பார்வை நேரங்கள் கொண்ட சேகரிப்பு இந்த நிறுவனத்திடம் உள்ளதாக ரைட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.

மேலும் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான ஐபிஎல், ஐசிசி, பிபா கால்பந்தாட்ட தொடர், கிரிக்கெட் போட்டிகள், பிரிமீயர் லீக் மற்றும் விம்பிள்டன் ஆகிய விளையாட்டுகளின் பிரத்யேக ஒளிப்பரப்பு உரிமங்களும் உண்டு.

இந்தியாவின் செய்தி மற்றும் பொழுதுபோக்கு துறையில் இந்த இணைப்பு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் இருதரப்புக்கும் இது லாபம் தரக்கூடிய ஒப்பந்தம் எனவும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com