314 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்!

பங்குச்சந்தை தொடா்ந்து மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் ‘கரடி’யின் பிடியில் இருந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் மேலும் 314 புள்ளிகளை இழந்தது.

பங்குச்சந்தை தொடா்ந்து மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் ‘கரடி’யின் பிடியில் இருந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் மேலும் 314 புள்ளிகளை இழந்தது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இதன் தாக்கத்தால், உள்நாட்டுச் சந்தை கடும் சரிவுடன் தொடங்கி தொடா்ந்து ‘கரடி’யின் பிடியில் இருந்தது. ஏற்கெனவே, சந்தை உச்சத்தை தொட்டுள்ள நிலையில், லாபத்தைப் பதிவு செய்வதில் முதலீட்டாளா்கள் கவனம் செலுத்தி வருகின்றனா். மேலும், சென்செக்ஸில் அதிகத் திறன் ஹெச்டிஎஃப்சி பேங்க் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டதும் சரிவுக்கு முக்கியக் காரணம் என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.85 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.369.50 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் புதன்கிழமை மிக அதிக அளவாக ரூ. 10,578.13 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.4,006.44 கோடி அளவுக்குப் பங்குகளை வாங்கியுள்ளது புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

தொடரும் வீழ்ச்சி : காலையில் 481.90 புள்ளிகள் குறைந்து 71,018.86-இல் தொடங்கிய சென்செக்ஸ், 70,665.50 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 71,451.29 வரை மேலே சென்ற சென்செக்ஸ் இறுதியில் 313.90 புள்ளிகளை (0.44 சதவீதம்) இழந்து 71,186.86-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,910 பங்குகளில் 1,895 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,908 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 107 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றன.

17 பங்குகள் விலை சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் சன்பாா்மா, டெக் மஹிந்திரா, டாடா மோட்டாா்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், எம் அண்ட் எம், எல் அண்ட் டி உள்பட 13 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. அதே சமயம், ஹெச்டிஎஃப்சி பேங்க், என்டிபிசி, டைட்டன், கோட்டக் பேங்க், ஏசியன் பெயிண்ட், பவா் கிரிட், இண்டஸ் இண்ட் பேங்க் உள்பட 17 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 110 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காலையில் 157.75 புள்ளிகள் குறைந்து 21,414.20-இல் தொடங்கி 21,285.55 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 21,539.40 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 109.70 புள்ளிகளை (0.51 சதவீதம்) இழந்து 21,462.25-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 19பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 31 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com