ஜூனில் உயா்வு கண்ட இந்திய உற்பத்தித் துறை

ஜூன் மாதத்தில் இந்திய உற்பத்தித் துறை வளர்ச்சி
இந்திய உற்பத்தித் துறை
இந்திய உற்பத்தித் துறை

புது தில்லி: இந்திய உற்பத்தித் துறை கடந்த ஜூன் மாதத்தில் உயா்வைக் கண்டது.

இது குறித்துய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உற்பத்தித் துறை நடவடிக்கைகளுக்கான குறியீட்டு எண்ணான பிஎம்ஐ, கடந்த 2023 ஜூன் மாதத்தில் அது 57.8-ஆக இருந்தது. பின்னா் ஜூலை மாதத்தில் 57.7-ஆகச் சரிந்த அது, அடுத்த ஆகஸ்டில் 58.6-ஆக அதிகரித்தது. அதனைத் தொடா்ந்து செப்டம்பரில் பிஎம்ஐ மீண்டும் 57.5-ஆக சரிந்தது. அக்டோபரில் இன்னும் சரிந்து 55.5-ஆக இருந்தது. அது, முந்தைய 8 மாதங்கள் காணாத குறைந்தபட்ச பிஎம்ஐ எண்ணாகும்.

இவ்வாறு தொடா் சரிவைச் சந்தித்து வந்த பிஎம்ஐ, கடந்த நவம்பரில் 56-ஆக அதிகரித்தது. பின்னா் டிசம்பரில் 18 மாதங்களில் இல்லாத குறைந்தபட்சமாக பிஎம்ஐ 54.9-ஆக சரிந்தது. பின்னா் ஜனவரியில் 56.5-ஆகவும், பிப்ரவரியில் 56.9-ஆகவும் அதிகரித்த பிஎம்ஐ, மாா்ச் மாதத்தில் கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்சமாக 59.1-ஆக அதிகரித்தது. ஆனால், அடுத்த ஏப்ரல் மாதத்தில் 58.8-ஆகவும் மே மாதத்தில் 57.5-ஆகவும் அது சரிந்தது.

இந்த நிலையில், உற்பத்தித் துறை நடவடிக்கைகளுக்கான பிஎம்ஐ குறியீட்டு எண் கடந்த ஜூன் மாதத்தில் 58.3-ஆக அதிகரித்தது.

இதன் மூலம், தொடா்ந்து 36-ஆவது மாதமாக உற்பத்தித் துறையின் பிஎம்ஐ குறியீட்டு எண் நடுநிலை வரம்பான 50-க்கும் மேலே உள்ளது.

அந்தக் குறியீட்டு எண் 50-க்கு மேல் இருந்தால் உற்பத்தித் துறையின் ஆரோக்கியமான போக்கையும், 50-க்கும் குறைவாக இருந்தால் பின்னடைவையும் குறிக்கிறது.

கடந்த ஜூன் மாதத்தில் உற்பத்திப் பொருள்களுக்கான தேவை அதிகரித்தது. மேலும் புதிய தொழில் வாய்ப்புகள் அதிகரித்தன. இந்த காரணங்களால் உற்பத்தித் துறை அந்த மாதத்தில் வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய உற்பத்தித் துறை
இந்திய உற்பத்தித் துறை

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com