ரூ.95 ஆயிரம்: அறிமுகமானது உலகின் முதல் சிஎன்ஜி மோட்டார்சைக்கிள்!
உலகின் முதல் சிஎன்ஜி மோட்டார்சைக்கிள் அறிமுக நிகழ்வு வெள்ளிக்கிழமை புணேவில் (இன்று) நடைபெற்றது. இந்த நிகழ்வில் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார்.
கார்களில், ஆட்டோகளில் முன்னரே சிஎன்ஜி அறிமுகமான நிலையில் முதன்முறையாக இருசக்கர வாகனங்களில் இப்போதுதான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஃப்ரீடம் 125 எனப் பெயரிடப்பட்டுள்ள பஜாஜின் இந்த இருசக்கர வாகனம் மூன்று மாடல்களில் 7 வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரூ.95,000 முதல் ரூ.1,10,000 வரை இவற்றின் ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2 லிட்டர் பெட்ரோல் கொள்ளளவு கலனும் 2 கிலோ சிஎன்ஜி கலனும் பொருத்தப்பட்டுள்ளது. சிஎன்ஜி கலன் 11 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இதன் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பஜாஜ் தெரிவிக்கிறது.
ஒரு முறை வாகனத்தில் எரிபொருள் நிரப்பினால் 330 கிமீ தொலைவு வரை செல்ல முடியும் எனக் கூறப்படுகிற இந்த வாகனத்திற்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
125 சிசி பைக்கில் சிஎன்ஜி எரிபொருள் என்கிற இந்த மாதிரி இந்தியாவுக்கும் உலகத்துக்குமே புதிதாக உள்ளது.
இது தொடர்பாக நிதின் கட்கரி பேசும்போது, நாட்டின் குரூட் ஆயில் இறக்குமதியை குறைப்பது மற்றும் மாற்று எரிபொருள் பயன்பாட்டை அதிகரிப்பதன் அவசியத்தைவும் வலியுறுத்தினார். வளங்கள் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் ஆட்டோமொபைல் தொழில்துறை வளர்ந்துவருவதாகவும் இந்த சந்தையில் ஜப்பானை பின்னு தள்ளி இந்தியா மூன்றாவது இடத்தை பெற்றுள்ளதையும் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.