
தொழில்நுட்ப நிறுவனமான ஜியோமி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் மொபைல் போன்களுக்கான உபரிபாகங்களில் குறைந்தது 55 சதவிகிதத்தை உள்நாட்டிலிருந்தே தருவிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஜியோமி தனது மின்சார சொகுசு காரை காட்சிப்படுத்தியது.
நிறுவனத்தின் இந்திய தலைவர் பி. முரளிகிருஷ்ணன், செமி கண்டக்டர் அல்லாத உபரிபாகங்களில் (பிஓஎம்) ஏறத்தாழ 35 சதவிகிதம் உள்நாட்டில் இருந்து பெறப்படுகிறது எனவும் அடுத்த இரு ஆண்டுகளில் பிஓஎம் உதிரிபாகங்களில் குறைந்தது 55 சதவிகிதம் உள்நாட்டில் இருந்து தருவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மின்சார கார் உற்பத்தியில் கவனம் செலுத்திவரும் ஜியோமி தனது ‘எஸ்யு7 மேக்ஸ்’ காரினை செவ்வாய்க்கிழமை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. எலெக்ட்ரிக் செடான் மாடலில் எஸ்யு7 மேக்ஸ் ஸ்போர்ட்ஸ் கார் 5 வகையிலான மின்சார தொழில்நுட்பங்களை மேம்படுத்தியுள்ளது.
673 பிஎஸ் ஆற்றல் கொண்டுள்ள இந்த கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 800 கிமீ தொலைவு வரை செல்ல முடியும். 2.78 நொடிகளில் 100 கிமீ வேகம் எட்டும் கார் நிறுத்தும்போது 33.3 மீட்டரில் 100 கிமீ வேகத்தில் இருந்து நிற்கும். 16 வகையான பாதுகாப்பு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது இந்தியாவில் காட்சிப்படுத்த மட்டுமே கார் வைக்கப்பட்டுள்ளதாகவும் விற்பனைக்கு அல்ல எனவும் ஜியோமி தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.