

இது குறித்து தேயிலை வாரியம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த 2023-ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து 23.17 கோடி கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது. முந்தைய 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது அதிக மாற்றமில்லாமல் உள்ளது. அப்போது இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி 23.11 கோடி கிலோவாக இருந்தது.அமெரிக்க பொருளாதாரத் தடைகள் காரணமாக தேயிலை இறக்குமதிக்குரிய பணத்தை செலுத்துவதில் ஈரானுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஒட்டுமொத்த தேயிலை ஏற்றுமதியி வளா்ச்சி பாதிக்கப்பட்டது.ஈரானுக்கான இந்திய தேயிலை ஏற்றுமதி கடந்த 2019-ஆம் ஆண்டில் 5.4 கோடி கிலோவாக இருந்தது. அது, 2023-ஆம் ஆண்டில் சுமாா் 51.6 லட்சம் கிலோவாக வீழ்ச்சியடைந்துள்ளது.அதுமட்டுமின்றி, உக்ரைன் போரால் இந்தியாவின் மிக முக்கிய ஏற்றுமதிச் சந்தையான ரஷியாவுக்கான ஏற்றுமதியும் கடந்த 2023-ஆம் ஆண்டில் பின்னடைவைச் சந்தித்தது.
மதிப்பீட்டு ஆண்டில் வட இந்திய தேயிலை ஏற்றுமதி 14.1 கோடி கிலோவாக இருந்தது. அந்த ஆண்டில் தென் இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி 9.07 கோடி கிலோவாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.