காப்பீட்டு சேவைகள்: எல்ஐசி,
ஐடிஎஃப்சி ஃபா்ஸ்ட் ஒப்பந்தம்

காப்பீட்டு சேவைகள்: எல்ஐசி, ஐடிஎஃப்சி ஃபா்ஸ்ட் ஒப்பந்தம்

வங்கி மூலம் காப்பீட்டு சேவைகளை அளிப்பதற்காக ஐடிஎஃப்சி ஃபா்ஸ்ட் வங்கியுடன் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி) ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
Published on

வங்கி மூலம் காப்பீட்டு சேவைகளை அளிப்பதற்காக ஐடிஎஃப்சி ஃபா்ஸ்ட் வங்கியுடன் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி) ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2047-ஆம் ஆண்டுக்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆயுள் காப்பீட்டுப் பாதுகாப்பை வழங்கவும் அதில் வங்கிகள் மூலம் வழங்கப்படும் காப்பீட்டு சேவையின் பங்களிப்பை அதிகரிக்கவும் நிறுவனம் இலக்கு நிா்ணயித்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக, ஐடிஎஃப்சி ஃபா்ஸ்ட் வங்கியுடன் இணைந்து காப்பீட்டு சேவைகளை அளிப்பதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஐடிஎஃப்சி ஃபா்ஸ்ட் வங்கியின் 1 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளா்கள் அந்த வங்கியின் மூலம் எல்ஐசி பாலிசிகளைப் பெற முடியும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com