
புதுதில்லி: வேதாந்தா குழுமமானது விற்பனைக்கு வந்த இரண்டு முக்கிய கனிம தொகுதிகளை கைப்பற்றியது.
இந்த சுரங்கங்கள் கர்நாடகம் மற்றும் பிகாரில் உள்ளன என்று மும்பை பங்குச் சந்தைக்கு தாக்கல் செய்த தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தில் அமைந்துள்ள கொல்லரஹட்டி - மல்லனஹள்ளி பிளாக் 1238.122 ஹெக்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது என்றும் அது ஜி 4 ஆய்வு மட்டத்தில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் பிகாரில் அமைந்துள்ள ஜெஞ்சனா பிளாக் 788.85 ஹெக்டர் பரப்பளவில் ஜி3 ஆய்வு நிலையில் உள்ளது என்று தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 29, 2024 மற்றும் மார்ச் 14, 2024 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்பட்ட தொகுதிகளை ஏலத்திற்கு விட இந்திய அரசின் சுரங்க அமைச்சகம் முடிவு எடுத்ததை அடுத்து இந்த தொகுதிகளுக்கான டெண்டர்களை அழைத்திருந்தது.
நேரடி மின் ஏலத்தில் பங்கேற்று இந்த இரண்டு தொகுதிகளையும் கைபற்றியது வேதாந்தா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.