
புதுதில்லி: குடியேற்ற பயனர் கட்டணத்தை தாமதமாக செலுத்தியதற்காக அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பானது இண்டிகோ நிறுவனத்திற்கு அபராதம் விதித்துள்ளது.
இண்டிகோ நிறுவனத்திற்கு 5,832.60 அமெரிக்க டாலர் (ரூ.4,88,517.29 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று தனது ஒழுங்குமுறை தாக்கல் செய்ததில் தெரிவித்துள்ளது. நிலுவைத் தேதிக்குப் பிறகு குடியேற்ற பயனர் கட்டணம் செலுத்துவதற்கு ஆணையம் அபராதம் விதித்துள்ளது. அதே வேளையில் அபராதத்தை தள்ளுபடி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை நிறுவனம் ஆராய்ந்து வருவதாக விமான நிறுவனம் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜூலை 24ஆம் தேதியன்று அபராதம் குறித்து நிறுவனத்திடமிருந்து ஒரு அறிவிப்பை பெற்றது என்று இண்டிகோ தெரிவித்துள்ளது. இது நிறுவனத்தின் நிதி, செயல்பாடுகள் குறித்த பிற நடவடிக்கைகளில் எந்த வித தாக்கமும் ஏற்படுத்தவில்லை இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இண்டிகோவின் தாய் நிறுவனமான இன்டர் குளோப் ஏவியேஷனின் பங்குகள் இன்று (வியாழக்கிழமை) மும்பை பங்குச் சந்தையில் 1.22 சதவிகிதம் உயர்ந்து ரூ.4,430.50 ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.