கோப்புப்படம்
கோப்புப்படம்

தங்கம் விலை மீண்டும் குறைந்தது! இன்றைய நிலவரம்

சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ. 51,320-க்கு விற்பனை..
Published on

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை காலை சவரனுக்கு ரூ. 400 குறைந்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு 4 நாள்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,280 வரை அதிரடியாக குறைந்தது.

கோப்புப்படம்
வெளிநாடு செல்லும் அனைவருக்கும் வரிச் சான்றிதழ் தேவையில்லை!

இதனிடையே, கடந்த சனிக்கிழமை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து, ரூ.51,720-க்கு வார இறுதி நாள்களில் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று காலை சவரனுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 51,320-க்கும் ஒரு கிராம் ரூ.6,415-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 50 பைசா அதிகரித்து ரூ. 89.50-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ. 500 அதிகரித்து ரூ. 89,500-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com