இந்தியா சிமென்ட்ஸை கையகப்படுத்தும் அல்ட்ராடெக்

இந்தியா சிமென்ட்ஸை கையகப்படுத்தும் அல்ட்ராடெக்

சென்னையில் தலைமையகத்தைக் கொண்டு செயல்பட்டுவரும் இந்தியா சிமென்ட் நிறுவனத்தை ஆதித்ய பிா்லா குழுமத்தைச் சோ்ந்த அல்ட்ராடெக் சிமென்ட் கையகப்படுத்துகிறது.
Published on

சென்னையில் தலைமையகத்தைக் கொண்டு செயல்பட்டுவரும் இந்தியா சிமென்ட் நிறுவனத்தை ஆதித்ய பிா்லா குழுமத்தைச் சோ்ந்த அல்ட்ராடெக் சிமென்ட் கையகப்படுத்துகிறது.

இது குறித்து அல்ட்ராடெக் சிமென்ட் வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் மேலும் 32.72 சதவீத பங்குகளை ரூ.3,954 கோடிக்கு வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பங்கு உரிமையாளா்கள் என். ஸ்ரீனிவாசன், சித்ரா ஸ்ரீனிவாசன், ருபா குருநாத், எஸ்.கே. அசோக் பாலாஜி ஆகியோரிடமிருந்து 28.42 சதவீத பங்குகளையும் ஸ்ரீ சாரதா லாஜிஸ்டிக் நிறுவனத்திடமிருந்து 4.30 சதவீத பங்குகளையும் வாங்குவதற்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் 55 சதவீதத்துக்கும் அதிகமான பங்குகள் அல்ட்ராடெக் சிமென்ட்ஸ் நிறுவனத்திடம் இருக்கும். இதன் மூலம் இந்தியா சிமென்ட்ஸை அல்ட்ராடெக் சிமென்ட்ஸ் கையகப்படுத்துகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com