
நாட்டின் இரண்டாவது பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் 2024ம் ஆண்டுடன் முடிவடைந்த நிதியாண்டில் சுமார் 11,900 கல்லூரி பட்டதாரிகளை பணியமர்த்தியுள்ளதாக தலைமை நிர்வாக அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான சலில் பரேக் தெரிவித்தார்.
கேம்பஸ் இன்டர்வியூ மூலம் புதியவர்களை தேர்வு செய்வதை ஆண்டுக்காண்டு சரிவைப் பதிவு செய்துள்ள இன்போசிஸ், கடந்த ஆண்டில் 50,000 க்கும் மேற்பட்ட புதிய பட்டதாரிகளை பணியமர்த்தியுள்ளது. 2001ஆம் ஆண்டுக்குப் பிறகு 23 ஆண்டுகளில் முதல் முறையாக இன்போசிஸ் ஊழியர்களின் எண்ணிக்கை 25,994 குறைந்துள்ளது. இந்த நிலையில், இந்த நிதியாண்டில் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை தற்போது 3,17,000 ஆக உள்ளது என்று தெரிவித்துள்ளது.
ஐடி ஊழியர்களின் சங்கமான நாசண்ட் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி எம்ப்ளாயீஸ் செனட் நிறுவனம், இது குறித்து தெரிவிக்கையில், சுமார் 2,000க்கும் மேற்பட்ட கல்லூரி பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்த வந்த நிலையில், தற்போது இன்போசிஸ் தொடர்ந்து தாமதப்படுத்தி வருகிறது என்றது.
இந்த ஆண்டில் சுமார் 11,900 கல்லூரிப் பட்டதாரிகளை நியமித்துள்ளோம். 3,17,000 பணியாளர்களுடன் இந்த பணியமர்த்தலை முடித்துள்ளோம். சுமார் 2,50,000 பணியாளர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன்கள் குறித்து பயிற்சி அளித்துள்ளோம். பாலின பன்முகத்தன்மையில் எங்கள் கவனம் தொடர்ந்து 39 சதவிகிதம் பெண் ஊழியர்களைக் கொண்டுள்ளது என்றார் பரேக்.
எங்கள் பணியமர்த்தல் மாதிரியை கணிசமாக மாற்றியுள்ளோம். இனி வளாகத்திலிருந்து புதியவர்களையும் வேலைக்கு அமர்த்துவதில்லை என்ற நிலையில், அவர்களில் பாதிக்கும் குறைவானவர்களை நாங்கள் வளாகத்திலிருந்தும், அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களை வளாகத்திற்கு வெளியேயும் பணியமர்த்த உள்ளோம் என்றார் தலைமை நிதி அதிகாரி ஜெயேஷ் சங்ராஜ்கா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.