
மின்சார வாகன தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஓலா எலெக்ட்ரிக், புதிய பங்கு வெளியீட்டுக்கான (ஐபிஓ) அனுமதியை நாட்டின் பங்குச்சந்தை கட்டுப்பாடு அமைப்பான செபியிடம் பெற்றுள்ளது.
புத்தாக்க தொழில் நிறுவனங்களில் முதல் பங்கு வெளியீட்டை எதிர்கொள்ளும் மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமாக ஓலா மாறுகிறது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம், ரூ.5,500 கோடி மதிப்பிலான 9.51 கோடி மூலதன பங்குகளை இந்த புதிய ஐபிஓவில் வெளியிடவுள்ளதாக செபிக்கு தாக்கல் செய்யப்பட்ட தகவலறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஓலா 4.7 கோடி பங்குகளுக்கான மூலதனத்தை இந்த வெளியீடு மூலம் திரட்டவுள்ளது. இண்டஸ் ட்ரஸ்ட் 41.78 லட்சம் பங்குகளை விற்கவுள்ளது.
கடந்தாண்டு டிசம்பரில் இந்த பங்கு வெளியீட்டுக்கான மாதிரி படிவங்களை செபியிடம் தாக்கல் செய்துள்ளது ஓலா நிறுவனம். இதில் பங்கு வெளியீட்டுக்கும் முன்னர் திரட்டவுள்ள ரூ.1,100 கோடி மூலதனமும் அடக்கம்.
இதன் மூலம் திரட்டப்படும் மூலதனத்தில் ரூ.1,126.4 கோடி மூலதன செலவுக்கும் ரூ.800 கோடி கடனை திருப்பி செலுத்தவும் பயன்படுத்தவுள்ளதாக செபிக்கு அளிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ரூ.1,600 கோடி ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு மேம்பாட்டு பிரிவில் முதலீடு செய்யவுள்ளதாகவும் ரூ.350 கோடி வளர்ச்சிக்கான முன்னெடுப்பிலும் பயன்படுத்தவுள்ளது.
இருசக்கர மின்சார வாகன விற்பனையில் 49 சதவிகிதத்தை கொண்டுள்ள ஓலா மே மாதம் மட்டும் எஸ்1 ஸ்கூட்டர்களில் 37,191 வாகனங்களை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.