புது தில்லி: நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் 400 புதிய கிளைகளைத் திறக்க இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) திட்டமிட்டுள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நடப்பு 2024-25-ஆம் நிதியாண்டுக்குள் நாடு முழுவதும் சுமாா் 400 புதிய கிளைகளைத் திறக்க திட்டமிட்டுள்ளோம்.
89 சதவீத எண்ம பரிவா்த்தனைகள் உள்பட 98 சதவீத பரிவா்த்தனைகள் கிளைகளுக்கு வெளியே நடைபெற்றாலும், புதிய மற்றும் வளா்ந்துவரும் பகுதிகளில் கிளைகளை அமைப்பது அவசியம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில் வங்கி 137 கிளைகளைத் திறந்தது. மாா்ச் மாத நிலவரப்படி நாடு முழுவதும் வங்கிக்கு 22,542 கிளைகளை உள்ளன என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.