இந்தியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் 200 புதிய விற்பனை மையங்கள்: சிட்ரோன்

சிட்ரோனின் பரப்புரை: இந்தியாவில் 200 புதிய விற்பனை மையங்கள்
இந்தியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் 200 புதிய விற்பனை மையங்கள்: சிட்ரோன்

புதுதில்லி: பிரெஞ்சு வாகன தயாரிப்பு நிறுவனமான, சிட்ரோன் இந்த ஆண்டு இறுதிக்குள், இந்தியாவில் 200 புதிய விற்பனை மையங்களை திறக்க போவதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் தங்களுடைய இந்திய கார் விற்பனை லைன்அப்பை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டிருக்கிறது பிரான்ஸைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான சிட்ரோன்.

இந்தநிலையில், நகர்ப்புற மற்றும் கிராமப்புற சந்தைகளில் புதிய டீலர்ஷிப்களைச் வழங்குவதன் மூலமாக, இந்தியாவில் தற்போதுள்ள 58 விற்பனை நிலையங்களிலிருந்து அதன் தடம் கணிசமாக அதிகரிக்கும் என்று சிட்ரோன் இந்தியா தெரிவித்துள்ளது.

இந்த முயற்சியினால், நாடு முழுவதும் பரந்து விரிந்து கிடக்கும் எங்கள் வாடிக்கையாளர் தளத்திற்கு, சிட்ரோயன் பிராண்டின் ஒப்பிடமுடியாத அர்ப்பணிப்பை இது வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிட்ரோன் இந்தியா பிராண்ட் இயக்குநர் ஷிஷிர் மிஸ்ரா தெரிவித்ததாவது:

நுகர்வோருக்கு எங்கள் பிராண்ட் கிடைக்கச் செய்யவும், அதே வேளையில் நகரங்களுக்கு அப்பால் எங்கள் நெட்வொர்க்கை விரிவுபடுத்த நாங்கள் விரும்புகிறோம் என்றார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஸ்டெல்லாண்டிஸ் தனது சிட்ரோன் பிராண்டிற்காக இந்தியாவில் ரூ.2,000 கோடி கூடுதல் முதலீட்டை அறிவித்தது. தற்போது சிட்ரோன் நிறுவனம் சி3 ஏர்கிராஸ் மற்றும் சி5 ஏர்கிராஸ் ஆகிய மாடல்களை விற்பனை செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com