ஹெச்பிசிஎல், ஐஓசி, பிபிசிஎல் பங்குகள் சரிவு!

எரிபொருள் விலை குறைப்பால் எண்ணெய் நிறுவன பங்குகள் வீழ்ச்சி!
ஹெச்பிசிஎல், ஐஓசி, பிபிசிஎல் பங்குகள் சரிவு!

புதுதில்லி: பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.2 குறைக்கப்பட்டதால், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பி.பி.சி.எல். மற்றும் ஹெச்.பி.சி.எல். பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் சரிந்து முடிந்தன.

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் பங்கு மும்பை பங்குச் சந்தையில் 6.29 சதவிகிதம் சரிந்து ரூ.468.70 ஆக நிலைபெற்றது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பங்கானது 5.46 சதவிகிதம் சரிந்து ரூ.161.15 ஆக உள்ளது. இன்ட்ரா டே வர்த்தகத்தில் இது 9.88 சதவிகிதம் சரிந்து ரூ.153.60 ஆக இருந்தது.

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் 3.74 சதவிகிதம் சரிந்து ரூ.586.25 ஆக முடிந்தது நிலையில், பகலில் இந்த பங்கானது ரூ.559.05 ஆக முடிந்தது.

புதுதில்லியில் பெட்ரோல் விலை முன்பு லிட்டருக்கு ரூ.96.72 உடன் ஒப்பிடும்போது தற்போது அது லிட்டருக்கு ரூ.94.72 ஆக இருக்கும். டீசல் விலை இப்போது ரூ.89.62 க்கு பதிலாக ரூ.87.62 ஆக இருக்கும் என்று எரிபொருள் சில்லறை விற்பனையாளர்களின் விலை அறிவிப்பு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com