பிளிப்கார்ட்டின் பங்குகளை வாங்க கூகுள் முடிவு!
புதுதில்லி: கூகுள் நிறுவனம், இ-காமர்ஸ் நிறுவனமான, 'பிளிப்கார்ட்' நிறுவனத்தில், சிறிதளவு பங்குகளை வாங்க திட்டமிட்டுள்ளது.
வால்மார்ட் தலைமையிலான சமீபத்திய நிதி ஆதாரத்தின் ஒரு பகுதியாக, ஒழுங்குமுறை மற்றும் வழக்கமான ஒப்புதல்களைப் பெறப்பட்டு, கூகுளை சிறிய முதலீட்டாளராக இணைப்பதற்காக அனைத்து நடவடிக்கை எடுத்து வருவதாக பிளிப்கார்ட் தனது அறிக்கையில் இன்று தெரிவித்துள்ளது.
இருப்பினும், இ-காமர்ஸ் நிறுவனம் கூகுள் முதலீடு செய்ய உள்ள தொகையையோ அல்லது நிறுவனத்தால் திரட்டப்படும் நிதியின் விவரங்களையோ வெளியிடவில்லை.
கூகுளின் முன்மொழியப்பட்ட முதலீடு மற்றும் அதன் கிளவுட் ஒத்துழைப்பால், பிளிப்கார்ட் தனது வணிகத்தை விரிவுபடுத்தவும், நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய அதன் டிஜிட்டல் உள்கட்டமைப்பின் நவீனமயமாக்கலை மேம்படுத்தவும் உதவும் என்று பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.