மேக்ஸ் ஹெல்த்கேர் - கோப்புப் படம்
மேக்ஸ் ஹெல்த்கேர் - கோப்புப் படம்

மேக்ஸ் ஹெல்த்கேர் 2வது காலாண்டு லாபம் 2% உயர்வு!

மேக்ஸ் ஹெல்த்கேர் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் நிகர லாபம், செப்டம்பர் காலாண்டில் 1.9 சதவிகிதம் உயர்ந்து ரூ.281.81 கோடியாக அதிகரித்துள்ளது.
Published on

புதுடில்லி: மேக்ஸ் ஹெல்த்கேர் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் நிகர லாபம், செப்டம்பர் காலாண்டில் 1.9 சதவிகிதம் உயர்ந்து ரூ.281.81 கோடியாக உள்ளது.

கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் அதன் லாபம் ரூ.276.68 கோடியாக இருந்தது என்று அதன் ஒழுங்குமுறை தாக்கலில் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க: டாடா ஸ்டீல் நிகர லாபம் ரூ.759 கோடி!

அதே வேளையில் தனது மூன்று கூட்டாளியான மேக்ஸ் பாலாஜி மருத்துவமனை, மேக்ஸ் ஸ்மார்ட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் மேக்ஸ் சாகேத் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆகியவை அதன் ஒருங்கிணைந்த நிதி அறிக்கைகளில் சேர்க்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒழுங்குமுறை தாக்கல் படி, நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் வருவாய் ஜூலை முதல் செப்டம்பர் 2025 வரையான நிதியாண்டில் ரூ.1,707.46 கோடியாக உயர்ந்துள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.1,363.16 கோடியாக இருந்தது.

அதே வேளையில் நிறுவனத்தின் மொத்த செலவினம் ரூ.1,042.22 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.1,374.61 கோடியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com