2025 மார்ச் மாதத்திற்குள் கூட்டுறவு வங்கிகள் டிஜிட்டல் மயமாக்கப்படும்

கூட்டுறவு வங்கிகள், 2025 மார்ச்சுக்குள், டிஜிட்டல்மயமாக்கப்படும் என தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, 'நபார்டு' தலைவர் கே.வி. ஷாஜி தெரிவித்துள்ளார்.
NABARD
NABARD
Published on
Updated on
1 min read

புதுதில்லி : கூட்டுறவு வங்கிகள், 2025 மார்ச்சுக்குள், டிஜிட்டல்மயமாக்கப்படும் என தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, 'நபார்டு' தலைவர் கே.வி. ஷாஜி தெரிவித்துள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கியானது, அனைத்து கூட்டுறவு வங்கிகளும் கோர் பேங்கிங் தீர்வை பின்பற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளது. இது நவீனமயமாக்கலை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.

கூட்டுறவு வங்கிகளை டிஜிட்டல் மயமாக்கும் பணியை மத்திய அரசு சார்பில் நடைபடுத்துகிறோம். இது மார்ச் 2025க்குள் நடக்கும்.

இதையும் படிக்க: ஏற்ற, இறக்கத்திலும் மிதமான லாபத்துடன் முடிவடைந்த இந்திய பங்குச் சந்தை!

இந்திய தொழில் கூட்டமைப்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், அனைத்து கிராமப்புற கூட்டுறவு வங்கிகளுக்கும் நாடு முழுவதும் பொதுவான ஒரு பகிரப்பட்ட சேவை நிறுவனத்தை உருவாக்க நபார்டு முன்மொழிந்தது. இதை மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியும் கொள்கையளவில் ஒப்புக் கொண்டுள்ளன.

தற்போது மண்டல ஊரக வங்கிகளை ஒருங்கிணைப்பதற்கும் கொள்கை அளவில் நிதி அமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளது. இது 'ஒரே மாநிலம், ஒரே ஆர்.ஆர்.பி' என்ற நிலைமைக்கு வழிவகுக்கும். இந்த மாத தொடக்கத்தில், நிதி அமைச்சகம் மண்டல ஊரக வங்கிகளுக்கான நான்காவது சுற்று ஒருங்கிணைப்பைத் தொடங்கியுள்ளது. அப்போது வங்கிகளின் எண்ணிக்கை 43 லிருந்து 28 ஆகக் குறைய வாய்ப்புள்ளது.

இதையும் படிக்க: ராயல் என்ஃபீல்ட் விற்பனை 31% அதிகரிப்பு

நிதி அமைச்சகத்தின் திட்ட வரைபடத்தின்படி, பல்வேறு மாநிலங்களில் செயல்படும் 15 மண்டல ஊரக வங்கிகள் செயல்பாட்டு திறன் ஒன்றிணைக்கப்படும்.

இதில் அதிகபட்சமாக ஆந்திராவில் 4 மண்டல ஊரக வங்கிகளும், உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 3 வங்கிகளும், பீகார், குஜராத், ஜம்மு & காஷ்மீர், கர்நாடகம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ஒடிசா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தலா 2 வங்கிகள் ஒன்றிணைக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com