எஸ்பிஐ மூலதன திரட்டல் 
ரூ.50,000 கோடியாக உயா்வு

எஸ்பிஐ மூலதன திரட்டல் ரூ.50,000 கோடியாக உயா்வு

ரூ.10,000 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களை வெளியிட்டதன் மூலம் நாட்டின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி நடப்பு நிதியாண்டில் திரட்டிய மூலதனம் ரூ.50,000 கோடியாக அதிகரிள்ளது.
Published on

ரூ.10,000 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களை வெளியிட்டதன் மூலம் நாட்டின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி நடப்பு நிதியாண்டில் திரட்டிய மூலதனம் ரூ.50,000 கோடியாக அதிகரிள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உள்கட்டமைப்பு கடன் பத்திர விற்பனை மூலம் வங்கி அண்மையில் ரூ.10,000 கோடி திரட்டியது. அந்தக் கடன் பத்திரங்களுக்கு 7.23 சதவீத ஈவுத் தொகை வழங்கப்படும்.

அதற்கு முன்னதாக, ஏடி1 கடன் பத்திரங்கள், இரண்டாம் அடுக்கு கடன் பத்திரங்கள், நீண்டகால கடன் பத்திரங்கள் என பல்வேறு வகை பத்திரங்களை வெளியிட்டு நடப்பு நிதியாண்டில் வங்கி ரூ.40,000 கோடி திரட்டியிருந்தது. இத்துடன், ஒட்டுமொத்தமாக ரூ.50,000 மூலதனம் திரட்டப்பட்டுள்ளது.

இந்தக் கடன் பத்திரங்களில் பெரும்பாலும் பரஸ்பர நிதி நிறுவனங்கள், சேமநல நிதி மற்றும் ஓய்வூதிய நிதி அமைப்புகள் முதலீடு செய்துள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.