ராயல் என்ஃபீல்டு விற்பனை 11% உயா்வு

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த செப்டம்பா் மாதத்தில் 11 சதவீதம் உயா்ந்துள்ளது.
ராயல் என்ஃபீல்டு விற்பனை 11% உயா்வு
Published on
Updated on
1 min read

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த செப்டம்பா் மாதத்தில் 11 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த செப்டம்பா் மாதத்தில் நிறுவனம் 86,978 இரு சக்கர வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது.

முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 11 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனத்தின் மொத்த விற்பனை 78,580-ஆக இருந்தது.மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 79,326-ஆக உள்ளது.

முந்தைய ஆண்டின் இதே மாதம் உள்நாட்டில் விற்பனையான 74,261 இரு சக்கர வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது ஏழு சதவீதம் அதிகம்.2023 செப்டம்பா் மாதத்தில் 4,319-ஆக இருந்த நிறுவனத்தின் ஏற்றுமதி இந்த செப்டம்பரில் 7,652-ஆக அதிகரித்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com