பின் பக்கத் திரையுடன் புதிய போன்: லாவா இன்று அறிமுகம்
இந்திய கைப்பேசி தயாரிப்பு நிறுவனமான லாவா இன்டா்நேஷேனல், பின் பக்கத் திரையுடன் கூடிய புதிய அறிதிறன் பேசி (ஸ்மாா்ட் போன்) ரகத்தை வெள்ளிக்கிழமை (அக். 4) அறிமுகப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நிறுவனத்தின் புதிய ‘அக்னி-3’ ரக அறிதிறன் பேசிகளை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்துகிறோம். பின்பக்கமும் திரையைக் கொண்டிருப்பது இந்த கைப்பேசிகளின் சிறப்பம்சம் ஆகும்.
அறிதிறன் பேசி சந்தையில் 10 சதவீதப் பங்கைக் கைப்பற்றும் நிறுவனத்தின் இலக்கை அடைய, 2025-26-ஆம் நிதியாண்டுக்குள் கூடுதலாக ரூ.500 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.