
இந்த வாரத்தின் முதல் நாளான இன்றும்(அக். 7) பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,926.99 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில், வர்த்தக நேர முடிவில் 638.45 புள்ளிகள் குறைந்து 81,050 புள்ளிகளில் வர்த்தகமானது.
அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, 218.85 புள்ளிகள் குறைந்து 24,795.75 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.
முன்னதாக பிற்பகல் 1.42 மணியளவில் சென்செக்ஸ் 941.20 புள்ளிகள் வரையிலும் நிஃப்டி 200 புள்ளிகளுக்கு மேலும் குறைந்தன.
இதையும் படிக்க | இந்தியா கூட்டணிக்கு மெஹபூபா முஃப்தி ஆதரவா?
சென்செக்ஸில் ஹெச்டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், என்டிபிசி, ஆக்சிஸ் வங்கி மற்றும் எல்&டி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சியடைந்தது. என்டிபிசி(4%) மிகக் கடுமையான சரிவைச் சந்தித்தது,
நிஃப்டியில் துறை வாரியாக, ஐ.டி.(0.66% ஏற்றம்) தவிர அனைத்து துறைகளும் இறக்கம் கண்டன. எண்ணெய் மற்றும் எரிவாயு 2.27%, வங்கிகள் 2%, நிஃப்டி உலோகத் துறை 2.44% சரிந்தது.
நிஃப்டியில் மஹிந்திரா & மஹிந்திரா, பாரதி ஏர்டெல், ஐடிசி, பஜாஜ் பைனான்ஸ் ஆகியவை ஏற்றம் கண்டன. அதானி போர்ட்ஸ், அதானி என்டர்பிரைசஸ், கோல் இந்தியா, என்டிபிசி பங்குகள் அதிகம் சரிந்தன.
நேஷனல் அலுமினியம், ஹிண்டால்கோ, அதானி எண்டர்பிரைசஸ், ஹிந்துஸ்தான் ஜிங்க், ஹிந்துஸ்தான் காப்பர், செயில் உள்ளிட்ட உலோகப் பங்குகள் 3% முதல் 6% வரை சரிவைக் கண்டன.
சென்செக்ஸ், நிஃப்டி இரண்டும் செப்டம்பர் இறுதியில் புதிய உச்சத்தை அடைந்து சாதனைப் படைத்த நிலையில், கடந்த வாரம் முழுவதும் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது.
இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள மோதல், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, செபியின் புதிய விதிகள் உள்ளிட்டவை பங்குச்சந்தை வீழ்ச்சிக்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.