82,000 புள்ளிகள் கடந்து சென்று மீண்டும் சரிந்து முடிந்த பங்குச் சந்தை!

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 167.71 புள்ளிகள் குறைந்து 81,467.10 புள்ளிகளாகவும், நிஃப்டி 31.20 புள்ளிகள் குறைந்து 24,982 புள்ளிகளாகவும் உள்ளது.
சித்தரிக்கப்பட்டது | மும்பை பங்குச் சந்தை
சித்தரிக்கப்பட்டது | மும்பை பங்குச் சந்தை
Published on
Updated on
1 min read

மும்பை: இந்திய ரிசர்வ் வங்கி தனது நாணய கொள்கை நிலைப்பாட்டை 'நடுநிலை' நிலைப்பாட்டிற்கு மாற்றியதை அடுத்து, இன்று காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 550 புள்ளிகள் உயர்ந்து 82,000 புள்ளிகளை மீண்டும் எட்டியது.

ரெப்போ விகிதத்தில் எந்த வித மாற்றம் இல்லை என்று தெரிவித்த ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் அது 6.5% ஆகவே தொடரும் எனறார். இதன் மூலம் 2023 பிப்ரவரி முதல் தொடர்ந்து 10-வது முறையாக ரெப்போ விகிதத்தில் ரிசர்வ் வங்கி மாற்றம் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 556.97 புள்ளிகள் உயர்ந்து 82,191.78 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 78.70 புள்ளிகள் உயர்ந்து 25,091.85 புள்ளிகளாக இருந்தது.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாப் 30 பங்குகளில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், டாடா மோட்டார்ஸ், பார்தி ஏர்டெல், பவர் கிரிட், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், சிப்லா, மாருதி சுசூகி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து முடிந்தது.

மாறாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஓஎன்ஜிசி, நெஸ்லே இந்தியா, ஐடிசி, நெஸ்லே, ஹெச்யுஎல், ஹெச்டிஎஃப்சி வங்கி, மஹிந்திரா & மஹிந்திரா ஆகியவை சரிந்து முடிந்தது.

இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 167.71 புள்ளிகள் குறைந்து 81,467.10 புள்ளிகளாகவும், நிஃப்டி 31.20 புள்ளிகள் குறைந்து 24,982 புள்ளிகளாகவும் உள்ளது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 852 புள்ளிகளும் நிஃப்டி 252 புள்ளிகளும் சரிந்தது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 1 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்து முடிந்தது. எஃப்எம்சிஜி (1.3 சதவிகிதம் சரிவு), எண்ணெய் & எரிவாயு (0.6 சதவிகிதம் சரிவு), அதே வேளையில் பார்மா, மின்சாரம், ரியாலிட்டி ஆகிய துறைகள் 1 முதல் 2 சதவிகிதம் உயர்ந்து முடிந்தது.

அக்சோ நோபல், போஷ், சிப்லா, கோஃபோர்ஜ், டிவிஸ் லேப்ஸ், டிக்சன் டெக்னாலஜிஸ், க்ளென்மார்க் பார்மா, ஹிட்டாச்சி எனர்ஜி, இன்ஃபோசிஸ், இப்கா லேப்ஸ், லாயிட்ஸ் மெட்டல்ஸ், எம்சிஎக்ஸ் இந்தியா, பேஜ் இண்டஸ்ட்ரீஸ், பாலிகேப் இந்தியா, சிம்பொனி, டோரண்ட் பார்மா, டோரண்ட் பவர், ட்ரெண்ட் உள்ளிட்ட 180 க்கும் மேற்பட்ட பங்குகள் பிஎஸ்இ-யில் இன்று 52-வார உச்சத்தை தொட்டது.

ஆசிய சந்தைகளில் ஷாங்காய், ஹாங்காங், டோக்கியோ மற்றும் சியோல் ஆகியவை ஏற்ற இறக்கத்தில் வர்த்தகமானது.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 0.95 சதவிகிதம் உயர்ந்து 77.91 அமெரிக்க டாலராக உள்ளது. அமெரிக்க சந்தைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) வர்த்தகத்தில் உயர்ந்து முடிந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com