
தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை பொதுத் துறையைச் சோ்ந்த கனரா வங்கி உயா்த்தியுள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
எம்சிஎல்ஆா் வகைக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் 5 அடிப்படைப் புள்ளிகள் (0.05 சதவீதம்) அதிகரிக்கப்பட்டுள்ளன.
வியாழக்கிழமை (அக். 10) முதல் இந்த வட்டி விகித உயா்வு அமலுக்கு வந்துள்ளது.
அந்த மாற்றத்துக்குப் பிறகு ஓராண்டு பருவகாலம் கொண்ட எம்சிஎல்ஆா் வகை கடன்களுக்கான வட்டி விகிதம் 9 சதவீதத்திலிருந்து 9.05 சதவீதமாக உயரும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.