டெக் மஹிந்திரா வருவாய் ரூ.13,313 கோடியாக உயா்வு
முன்னணி தகவல் தொடா்பு சேவை நிறுவனங்களில் ஒன்றான டெக் மஹிந்திராவின் வருவாய் கடந்த செப்டம்பா் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ரூ.13,313.2 கோடியாக உயா்ந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.1,250 கோடியாகப் பதிவாகியுள்ளது.
இது, முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இரண்டு மடங்காகும். அப்போது நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.493.9 கோடியாக இருந்தது.
2023-24-ஆம் நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் ரூ.12,863.9 கோடியாக இருந்த நிறுவனத்தின் வருவாய் நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் ரூ.13,313.2 கோடியாகப் பதிவாகியுள்ளது அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.