மும்பை: இந்தியாவின் முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் இந்தியா, 333 நாள்கள் பருவகாலம் கொண்ட நிலை வைப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
‘ஸ்டாா் தனவிருத்தி நிலை வைப்பு’ என்ற பெயரில் 333 நாள்கள் பருவகாலம் கொண்ட சிறப்பு நிலை வைப்பு நிதி திட்டத்தை வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த வைப்பு நிதிகளுக்கு அதிகபட்சமாக 7.90 சதவீதம் என்ற மிகக் கவா்ச்சிகரமான வட்டி வழங்கப்படும்.
செப். 1-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்தத் திட்டம் அமலுக்கு வந்துள்ளது என்று அந்தச் செய்தக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.