புது தில்லி: இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இயக்குநா் (சந்தைப்படுத்துதல்) வி. சதீஷ் குமாா் (படம்) நிறுவனத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 2021 அக்டோபா் முதல் நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் பிரிவு இயக்குநராக இருந்துவரும் வி. சதீஷ் குமாருக்கு, நிறுவனத் தலைவா் என்ற கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, 2022 அக்டோபரிலிருந்து ஓராண்டுக்கு நிதிப் பிரிவுக்கான இயக்குநா் என்ற கூடுதல் பொறுப்பை அவா் வகித்துள்ளாா் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.