பெங்களூருவில் வீடுகள் விற்பனை 19% உயர்வு!

ரியல் எஸ்டேட் மற்றும் ஸ்கொயர் யார்ட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெங்களூருவின் குடியிருப்பு சந்தை தொடர்ந்து நிலையான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறதாக தெரிவித்துதள்ளது.
சித்தரிக்கப்பட்டது
சித்தரிக்கப்பட்டது
Published on
Updated on
1 min read

பெங்களூரு: ரியல் எஸ்டேட் மற்றும் அடமானங்களுக்கான ஒருங்கிணைந்த தளமான ஸ்கொயர் யார்ட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெங்களூருவின் குடியிருப்பு சந்தை தொடர்ந்து நிலையான வளர்ச்சியை பதிவு செய்து வருவதாக தெரிவித்துதள்ளது.

தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் நகரத்தில் 28,356 பரிவர்த்தனைகள் பதிவாகியுள்ள நிலையில், இது முந்தைய காலாண்டை விட தற்போது 19 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

வெள்ளம் மற்றும் நீர் பற்றாக்குறை ஆகிய சவால்கள் இருந்தபோதிலும், வீடு வாங்குபவர்களின் தேவை குறிப்பிடத்தக்க வகையில் நெகிழ்ச்சியுடன் உள்ளது. வலுவான தகவல் தொழில்நுட்பத் துறையினால் இது மேலும் அதிகரித்துள்ளது என்று ஸ்கொயர் யார்ட்ஸின் முதன்மை பங்குதாரரான சோபன் குப்தா தெரிவித்துள்ளார்.

குப்தாவை பொறுத்தவரை, கிழக்கு மற்றும் தெற்கு புறநகர்ப் பகுதிகள் அவற்றின் முறையீட்டைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதே வேளையில் வடக்கு புறநகர்ப் பகுதிகள் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் மனைகள் இரண்டிற்கும் ஆர்வமுள்ள முக்கிய பகுதிகளாக உருவாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com